Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெண்களை மதுக்கடைகளுக்கு அனுப்புவதற்கு அனுமதி வழங்கியுள்ளதன் மூலம், மிகவும் திட்டமிட்ட வகையில் இந்த நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்க திட்டம் தீட்டப்படுகிறது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலி உடுகம விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசார நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “பல வருட காலமாக பெண்களுக்கு இருந்து வரும் கௌரவத்தை தற்போது சீர்குழைக்க எண்ணியுள்ளனர். இரவு 10 மணி வரை மதுக்கடையில் ஒரு பெண் வேலை செய்வாராயின் அவரது நிலை குறித்து நாம் சிந்திக்க முடியும். உள் நோக்கங்களை கருத்திற்கொண்டே இவர்கள் இத்தகைய வேலைத்திட்டங்களை செய்கின்றனர். இந்த அரசாங்கம் மக்களை மறந்து செயற்படுகிறது. ஜனாதிபதி கூறுகிறார் அரசாங்கம் குப்பை மேட்டை விட நாறுகிறது என்று. இதனை யாருக்கு கூறுகிறார்? நாங்களா அரசாங்கத்தை கொண்டு நடத்துகிறோம்? யாருடைய தவறு இது.” என்றுள்ளார்.

0 Responses to பெண்களை மதுக்கடைக்கு அனுப்பி கலாச்சாரத்தை சீரழிக்க அரசு திட்டம்: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com