Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெள்ளிக்கிழமை மத்திய மற்றும் தெற்கு மெக்ஸிக்கோவை 7.2 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதில் கட்டடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் பீதியில் இல்லங்களை விட்டு வெளியேறி வீதியில் குவிந்தனர்.

இது சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக இருந்த போதும் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ பலத்த சேதம் ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல் இல்லை. 5 மாதங்களுக்கு முன்பு தான் மெக்ஸிக்கோவை வலிமையான பூகம்பம் ஒன்று தாக்கியிருந்தது. செப்டம்பரில் தாக்கிய இந்த நிலநடுக்கத்தில் மெக்ஸிக்கோவின் தலைநகரில் மாத்திரம் 228 பேரும் ஏனைய மாநிலங்களில் 141 பேரும் பலியாகி இருந்தனர். இதன் போது ஏற்பட்ட பலத்த சேதம் இன்னமும் பூரணமாகத் திருத்தப் படாத நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அடுத்த பூகம்பம் தாக்கியுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS இன் தகவல் படி மெக்ஸிக்கோவின் தெற்கே ஒவாக்ஸாக்கா மாநிலத்தின் பினெடோப்பாவுக்கு வடகிழக்கே 57 Km தொலைவில் 7.2 ரிக்டரில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் மெக்ஸிக்கோவின் பொது மக்கள் பாதுகாப்பு அமைப்பின் டுவிட்டர் தகவல் படி இந்நிலநடுக்கத்தால் உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை என்றும் பாரிய சேதம் ஏற்படவில்லை என்றும் தெரிய வருகின்றது. இந்த வலிமையான நிலநடுக்கத்தை அடுத்து 5.8 ரிக்டரில் தொடர் அதிர்வும் பதிவானதால் பொது மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to மத்திய மற்றும் தெற்கு மெக்ஸிக்கோவைத் தாக்கிய 7.2 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com