Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

59 பயணிகளுடனும் 6 குழு உறுப்பினர்களுடனும் தெற்கு ஈரானில் பயணித்த பயணிகள் விமானம் மலையில் மோதி விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 65 பேரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது.

தலைநகர் டெஹ்ரானில் இருந்து இஸ்பஹான் மாகாணத்திலுள்ள யாசூஜ் என்ற நகரை நோக்கி செல்லுகையில் செமிரோம் நகரத்துக்கு அருகே பனிமூட்டம் காரணமாக ஜாக்ரோஸ் மலைப் பகுதியிலுள்ள டேனா மலையில் மோதி இது விபத்தில் சிக்கியுள்ளது.

மோசமான கால நிலை காரணமாக மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர்களால் உடனே செல்ல முடியவில்லை. இந்த விமானம் ஈரானின் ஆசிமான் ஏர்லைன்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஆகும். பல வருடங்களாக அணுவாயுத உற்பத்தி காரணமாக உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதித்திருந்ததால் விமான உதிரிப் பாகங்களையோ அதிகளவு புதிய விமானங்களையோ ஈரானால் கொள்வனவு செய்ய முடியவில்லை. இதனால் அங்கு பழமை வாய்ந்த விமானங்கள் பல அடிக்கடி விபத்தில் சிக்கி வந்துள்ளது.

எனினும் சில வருடங்களுக்கு முன் முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் மேற்கொள்ளப் பட்ட அணுவாயுத உற்பத்தி தடை உடன்படிக்கையை அடுத்து ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப் பட்டன.

 இதனால் தற்போது உலகின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனங்களான போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகியவற்றிடம் இருந்து விமானங்களை வாங்குவதற்கு ஈரான் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தெற்கு ஈரானில் விபத்தில் சிக்கிய பயணிகள் விமானம் : 65 பயணிகளும் பலி என அச்சம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com