Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போக்கோ ஹராம் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டு நைஜீரிய சிறைகளில் அடைக்கப் பட்டிருந்த 500 பேரை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது.

இதற்குக் காரணமாக இவர்கள் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உடையவர்கள் தான் என்பதற்குப் போதிய ஆதாரம் இல்லை என்பது கூறப்பட்டுள்ளது. மேலும் இதே காரணம் கருதி நைஜீரியாவின் வடகிழக்கே கைஞ்சி நகரில் இராணுவத் தடுப்பு முகாமில் இருந்தும் பலர் விடுதலை செய்யப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வாரம் போக்கோ ஹராமுடன் தொடர்புள்ளவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ்  பலர் தண்டிக்கப் பட்டும் இருந்தனர். மறுபுறம் சிரியாவில் துருக்கி எல்லையோரமாக இருக்கும் ஆப்ரின் என்ற நகர்ப்பகுதியை குர்துக்களிடம் இருந்து மீட்க துருக்கி இராணுவம் போர் மேற்கொண்டு வருகின்றது. இந்த துருக்கிப் படையை எதிர்கொள்ள தற்போது குர்துக்கள் சிரிய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to போக்கோ ஹராமுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட 500 பேர் நைஜீரியாவில் விடுதலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com