உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெருவெற்றி பெற்றுள்ள போதிலும், தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளமையை மதித்து ஏற்றுக்கொள்வதாக அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தன்னுடைய துவிட்டர் பக்கத்தில் அவர் எழுதியுள்ளதாவது, “தமிழ் பேசும் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்கின்றோம். அவர்களோடு மேலும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கான வழிகளை நாம் நுட்பமாக ஆராய்கின்றோம். இந்த நாட்டின் அத்தனை குடிமக்களுக்காகவும் பேதமின்றி ஓய்வின்றிச் சேவையாற்றக் காத்திருக்கிறோம்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் பேசும் மக்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும்: நாமல்