உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கியுள்ள ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை ஏற்றுக்கொண்டு, மக்களின் கருத்துக்களுக்கு தலை சாய்ப்பதாகவும் அந்தக் கட்சியின் செயலாளர் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, ‘கட்சியில் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து திருத்தமான துரிதமான பயணமொன்றை தமது கட்சி முன்னெடுக்கும். ஐக்கிய தேசிய கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பல சேவைகள் பலருக்கு இதுவரை தென்படவில்லை. இந்த சேவைகளின் நன்மைகள் விரைவில் பொதுமக்களை போய்ச் சேரும். வெற்றி கொள்ளப்படாத மற்றும் தாமதமான கருமங்களையும் மாற்றியமைத்து வெற்றியை நோக்கி செல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டு மக்களின் ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்; தேர்தல் தோல்வி குறித்து ஐ.தே.க கருத்து!