பிரித்தானியாவில் இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைப் பார்த்து ‘கழுத்தை அறுத்து விடுவேன்’ என மிரட்டிய இலங்கை இராணுவ அதிகாரி, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் இறுதி மோதல்களின் போது, இராணுவ படைப்பிரிவு ஒன்றுக்குத் தலைமை தாங்கிய அதிகாரி என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும், அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
2008 - 2009ஆம் ஆண்டு காலப்பகுதில், மணலாறு பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி முன்னேறிய 59 ஆவது படைப்பிரிவில் இடம்பெற்றிருந்த 11ஆவது கெமுனுகாவல்படை பற்றாலியனின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியாற்றியிருந்தார்.
முல்லைத்தீவு வைத்தியசாலை மீதான பீரங்கித் தாக்குதலை 59 ஆவது டிவிசன் படையினரே மேற்கொண்டனர் என ஐ.நா விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to ஆர்ப்பாட்டக்காரர்களின் கழுத்தை அறுக்கப்போவதாக மிரட்டிய இலங்கை இராணுவ அதிகாரி அடையாளம் காணப்பட்டார்!