Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“நஷ்டஈடு பெறுவதற்காக நாங்கள் போராடவில்லை. நாங்கள் நேரடியாக இராணுவத்திடம் கையளித்த பிள்ளைகளை விடுவிக்கக் கோரியே போராடுகின்றோம்” என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று தற்போது யாரும் இல்லை. ஆகவே, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வவுனியாவில் 348வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளதாவது, “கடந்த ஒரு வருட காலமாக எங்களது பிள்ளைகளை விடுதலை செய்வதாக கூறிய ஜனாதிபதி, இப்போது காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் இல்லை என்று கூறுகிறார்.

ஜனாதிபதியுடன் எமது பிள்ளைகள் நிற்கும் ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. எமது பிள்ளைகளுக்கு ஜனாதிபதியால் நட்டஈடு கொடுக்க முடியுமா? நாங்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, எமது பிள்ளைகள் இல்லை என ஏன் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை. எமது பிரச்சினையில் சர்வதேசம் தலையிடவேண்டும். அரசாங்கத்தில் எமக்கு நம்பிக்கையில்லை. எங்களை இலங்கை அரசாங்கம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.”என்றுள்ளனர்.

0 Responses to நஷ்டஈடு பெறுவதற்காக போராடவில்லை; பிள்ளைகளுக்காகவே போராடுகிறோம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com