Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனாவில் இதுவரை அந்நாட்டு அதிபர் பதவியில் இருப்பவர் இருமுறை மட்டுமே அப்பதவியில் நீடிக்க முடியும் என்ற சட்டம் இருந்து வருகின்றது.

ஆனால் தற்போது இந்தக் கட்டுப்பாட்டை நீக்க அங்கு ஆளும் கம்யூனிசக் கட்சி முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் அங்கு 2 ஆவது முறையாக அதிபராகப் பதவி வகித்து வரும் ஜீ ஜின்பிங்கின் பதவிக் காலத்தை 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் நீட்டிக்க ஏதுவான நிலமை உருவாகி உள்ளது.

தற்போது அதிபர் ஜீ ஜின்பிங் ஆளும் சீனக் கம்யூனிசக் கட்சியின் தலைவராகவும் முப்படைகளின் தலைவராகவும் சேர்த்தே கடமையாற்றுவதால் அவர் அங்கு புரட்சித் தலைவரும் தாபகருமான மவோ ஷெடோங் இற்குப் பிறகு சக்தி மிக்க தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது கம்யூனிசக் கட்சி சீனாவில் பல தசாப்தங்களாக ஆளும் கட்சியாக இருந்து வருவதும் நோக்கத்தக்கது.

இந்நிலையில் தனது ஆட்சிக் காலத்தில் ஊழலை ஒழிக்க முயற்சி மேற்கொண்டது, வெளிநாடுகளில் சீனாவின் முதலீட்டை அதிகரித்தது, குறைந்து வந்த பொருளாதார நிலையை சமாளித்தது, ஹாங்கொங்கின் வருங்காலத்துக்கு வழி செய்தது மற்றும் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்தது போன்ற நடவடிக்கைகள் காரணமாக ஜீ ஜின்பிங்கிற்கு சீனாவில் ஆதரவு அதிகரித்துள்ளது. மேலும் ஒரே பெல்ட் கொள்கை மூலம் புதிய உலகளாவிய வர்த்தகப் பாதைகளை உருவாக்குதல் மற்றும் 2020 இற்குள் சீனாவில் வறுமையை இல்லாது செய்தல் போன்ற வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டும் ஜீ ஜின்பிங் செயற்பட்டு வருகின்றார்.

0 Responses to சீன அதிபர் பதவியில் ஜீ ஜின்பிங் தொடர்ந்து நீடிக்க கம்யூனிசக் கட்சி முனைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com