Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“2011ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு என்னை அழைத்த அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ, பேச்சுவார்த்தை எனும் பெயரில் மிரட்டலே விடுத்தார். அவர் மட்டுமல்ல, அவரோடு இருந்த அனைவருமே அப்படியே நடந்து கொண்டனர்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்ககட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பேச்சுவார்ததைக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அழைத்த போதும், கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கூறியிருந்தார்.

குறித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், திருகோணமலையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டார். அதன்போதே மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.

0 Responses to பேச்சுவார்த்தைக்கு சென்ற என்னை மஹிந்த ராஜபக்ஷ மிரட்டினார்; இரா.சம்பந்தன் குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com