மத்தியில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியால் பா.ஜ.க.வுக்கு பலன் கிடைக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் எச்சரித்துள்ளார்.
மக்களவைக்கு அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் பொது தேர்தல் வரவுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றாக புதிய 3 வது அணி அமைக்கும் முயற்சியை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் தொடங்கியுள்ளார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா ஆதரவு அளித்துள்ளார். இது தொடர்பாக மற்ற மாநில கட்சிகளுடன் அவர் பேச இருக்கிறார்.
இந்நிலையில் 3வது அணி அமைக்கும் முயற்சி பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொது செயலாளர் பிரகாஷ் காரத் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: “வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த இலக்காக இருக்க வேண்டும். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி பாஜகவிற்கே பலனளிக்கும். இந்த விஷயத்தில் மாநிலக் கட்சிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம் போன்ற மாநிலக் கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் காங்கிரசுடன் கை கோர்த்துள்ளன. இதேபோன்று மற்ற மாநிலக் கட்சிகளும் காங்கிரசுன் இணைந்து பாஜகவை எதிர்க்க முனைய வேண்டும்.உ.பி.தேர்தல் கற்றுத் தரும் பாடத்தை மாநிலக் கட்சிகள் மறந்து விடக் கூடாது.
பாஜகவிற்கு எதிராக ஒன்று திரண்டால் மட்டுமே அக்கட்சியை வீழ்த்த முடியும். வரும் மக்களவைத் தேர்தலிலும் பாஜகவிற்கு எதிரான வாக்குகளை ஒன்று திரட்ட முனைய வேண்டும். அதேபோன்று முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் இருந்த நிலையை காங்கிரஸ் மாற்றிக் கொள்ள வேண்டும். தற்போதைய புதிய சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வது அவசியம். மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதை மட்டுமே எதிர்க்கட்சிகள் இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to மூன்றாவது அணி அமைந்தால், அது பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமையும்: பிரகாஷ் காரத் எச்சரிக்கை!