Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள், தமது தந்தையை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சதுரிகாவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி, சுகயீனம் காரணமாக மரணமடைந்த தனது மனைவியின் இறுதி நிகழ்வுக்கு சிறைவிடுப்பில் வருகைதந்த ஆனந்தசுதாகர் இறுதி நிகழ்வு முடிந்து மீண்டும் சிறைச்சாலை பேரூந்தில் மகசீன் சிறைச்சாலை நோக்கி செல்வதற்கு ஏறிய போது அவரது பத்து வயது மகள் சங்கீதாவும் சிறைச்சாலை பேரூந்தில் தந்தையுடன் சேர்ந்து ஏறியமை அனைவரின் மனங்களையும் நெகிழவைத்த உருக்கமான சம்பவமாக அமைந்தது.

தாயும் தந்தையும் இல்லாத நிலையில் வாழ்ந்து வரும் இரு பிள்ளைகளான கனிரதன் மற்றும் சங்கீதாவின் நிலைமைகளை கருத்தில் கொண்டு ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு பல மட்டங்களிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்தான் நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா ஜனாதிபதியின் மகள் சதுரிகாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அன்புடன் சதுரிகா அக்காவுக்கு!

அம்மாவையும் இழந்து அப்பாவையும் பிரிந்து நானும் அண்ணாவும் அநாதையாய் இருக்கின்றோம். நான் அம்மாவின் வயிற்றில் இருந்தபோதே அப்பா கைது செய்யப்பட்டார்.

எனக்கு இன்று எனக்கு பத்து வயது இதுவரைக்கும் அப்பாவுடன் பாசமாக பழகியது இல்லை. அம்மாவின் செத்தவீட்டில்தான் அப்பாவின் மடியில் இருக்க கிடைத்தது. அதுவும் கொஞ்சநேரமே.

அம்மா இல்லாத இந்த வீட்டில் நானும் அண்ணாவும் அப்பாவுடன் இருக்க ஆசையாய் இருக்கு. அக்கா உங்களுக்குத் தெரியும் அப்பாவின் பாசமும் அருமையும். நீங்கள் கருணை வைத்து உங்கட அப்பாவுக்கு கொஞ்சம் சொல்லி எங்கட அப்பாவை மன்னித்து விடச்சொல்லுங்கோ.” என்றுள்ளது.

0 Responses to ‘உங்கட அப்பாவிடம் சொல்லுங்கோ எங்கட அப்பாவை விடச்சொல்லி’; ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதியின் மகளுக்கு கடிதம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com