பௌத்த மதத்தைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள மியான்மாரின் வடக்கு பகுதியில் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த சிறுபான்மை கச்சின் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே தெற்கே ராக்கைனில் றோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நிகழ்த்திய இனவழிப்பில் இலட்சக் கணக்கானோர் பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்துள்ள நிலையில் வடக்கு மியான்மாரில் இராணுவத்துக்கும் கச்சின் இன கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏப்பிரல் மாதம் தொடக்கம் சுமார் 4000 பொது மக்கள் கச்சினில் தமது வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். நீண்ட காலமாக கச்சின் சுதந்திர அமைப்புக்கும் அரச துருப்புக்களுக்கும் இடையே மூண்டுள்ள மோதல்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றது. கிளர்ச்சியாளர் மீது வான் வழித் தாக்குதலையும் பீரங்கிப் படைத் தாக்குதல்களையும் இராணுவம் மேற்கொண்டு வருகின்றது. இதனால் வடக்கே சீன எல்லையில் பொது மக்கள் அகதிகளாக சிக்கி இருப்பதாகவும் இவர்களுக்கு அடிப்படை வசதிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
மியான்மாரில் மனித உரிமை மீறல்களைத் தடுக்கத் தவறியதற்காகவும் அங்கு உதவி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்காது இருப்பதாலும் அந்நாட்டின் அரச தலைவரான நோபல் பரிசை வென்ற ஆங் சான் சூ க்யி இனை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதேவேளை மியான்மார் இனவழிப்பில் இருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து வெளியேறி பங்களாதேஷில் தங்கியுள்ள சுமார் 700 000 இற்கும் அதிகமான றோஹிங்கியா முஸ்லிம் அகதிகளைச் சந்திக்க ஐ.நா பாதுகாப்புச் சபையின் உதவியாளர் குழு சனிக்கிழமை பங்களாதேஷை வந்தடைந்துள்ளது.

0 Responses to மியான்மாரின் கச்சின் பகுதியில் வன்முறை : ஆயிரக் கணக்கானோர் இடப்பெயர்வு