Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெள்ளிக்கிழமை கொரிய எல்லையிலுள்ள ப்யாங்சாங் நகரில் சந்தித்துக் கொண்ட இரு கொரிய தேசத் தலைவர்களும் இரு நாட்டின் ஒரே இலக்கு பூரண அணுவாயுதப் பகிஷ்கரிப்பு என்றும் இதன் மூலம் அணுவாயுதம் அற்ற கொரியத் தீபகற்பத்தை எட்டுவது சாத்தியம் என்றும் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.

மேலும் விரைவில் சந்திக்கவுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் என்ன பேசிக் கொள்ளவுள்ளனர் என்பது தொடர்பிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த இரு தேசங்களுமே 1950 இல் யுத்தத்தில் ஈடுபட்டு இருந்தவை என்பதுடன் அண்மைக் காலமாக வடகொரியாவின் அச்சுறுத்தும் ஏவுகணைப் பரிசோதனைகள் காரணமாக மீண்டும் ஒருமுறை இது போன்ற ஒரு யுத்தம் தோன்றி விடுமோ என பொது மக்கள் அஞ்சிக் கொண்டிருந்த வேளையில் இந்த அமைதிப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. கடந்த செப்டம்பரில் வடகொரியா மேற்கொண்ட 6 ஆவதும் இறுதியுமான அணுப் பரிசோதனையின் போது அது பரிசோதித்த அணுகுண்டு 250 கிலோடன் எடையுடன் 1945 இல் ஹிரோஷிமாவில் போடப் பட்ட அணுகுண்டை விட 16 மடங்கு பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் கணிப்புப் படி கடந்த வருடம் வடகொரியா கிட்டத்தட்ட 60 அணுசக்தி தொடர்பிலான உபகரணங்களை வைத்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது. மேலும் இவை வெளிப்படையாகத் தெரியாதவாறு நிலக்கீழ் சுரங்கக்களுக்குள் பதுக்கி வைக்கப் பட்டும் உள்ளன. மறுபுறம் செப்டம்பர் 1 இல் அமெரிக்க மாநிலத் திணைக்களம் வெளிவிட்ட தகவலில் அமெரிக்கா வசம் மொத்தம் 1393 சக்தி வாய்ந்த அணுவாயுதங்கள் உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரு கொரியத் தலைவர்களதும் பேச்சுவார்த்தை வெற்றியடந்துள்ள நிலையிலும் வடகொரியா மீதான அழுத்தங்கள் இன்னமும் தொடரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆயினும் அணுவாயுதங்கள் இல்லாத கொரியத் தீபகற்பத்தில் கொரியர்கள் அனைவரும் ஒன்றாக வாழும் நாள் வரும் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் கிம் ஜொங் உன்னுடன் சந்திப்பு நிகழுமானால் நிச்சயம் ஒரு பயன் தரக்கூடிய ஒப்பந்தத்தை எட்டக் கூடிய பொறுப்பு தனக்கு உள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

0 Responses to இரு கொரியத் தலைவர்களும் பூரண அணுவாயுதப் பகிஷ்பரிப்புக்கு உடன்பாடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com