Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை ஜனாதிபதியே பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியும். அவரை விடுதலை செய்ய முடியாதென்ற மாற்றுக்கருத்திற்கு இடமில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை வெசாக் தினத்திற்கு முன்னர் விடுவிக்க வேண்டுமென பல தரப்பினரும் அழுத்தங்கள் கொடுத்து வரும் நிலையில், புத்தாண்டு தினத்திற்கு விடுவிக்கப்படுவார் என ஜனாதிபதி தெரிவித்திருந்தும் விடுவிக்கப்படவில்லை.

ஆனந்த சுதாகரனை ஜனாதிபதியால் விடுவிக்க முடியாது நீதிமன்றமே விடுவிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை ஜனாதிபதி சம்பந்தப்பட்ட விடயம். ஆனந்தசுதாகரன் வழக்கின் தீர்ப்பிற்கு பின்னர் தண்டனை அனுபவிக்கும் கைதி. ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் மட்டுமே அவரை விடுதலை செய்ய முடியும்.

கடந்த வாரம் ஜனாதிபதியுடன் நான் தொலைபேசியில் உரையாடிய போது, அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதில் மாற்றம் இல்லை என்பதே தனது நிலைப்பாடும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமன்றி பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததுள்ளார்.

அத்துடன், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உள்ள தடங்கல்களை விசாரித்த போது, அதில் உள்ள தடைகளைப் பற்றி தெரிவித்தார். ஜனாதிபதியினால் கூறப்பட்ட காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தாலும் கூட, ஜனாதிபதியினூடாக இவற்றை நிறைவேற்ற வேண்டும். அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில் விதிவிலக்குக் கிடையாது. ஆகையினால், இவர்களின் விடுதலை தொடர்பாகவும் ஜனாதிபதியுடன் பேசியுள்ளேன். வெசாக் தினம் முடிந்த பின்னர் தம்முடன் பேசுவதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார்.” என்றுள்ளார்.

0 Responses to அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடு: எம்.ஏ.சுமந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com