Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காங்கிரஸ் கட்சியோ சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரிடமும் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸிங் முறையில் நேற்று வெள்ளிக்கிழமை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 3 விதமான திட்டங்களுடன் களமிறங்கியுள்ளது. வளர்ச்சி, வேகமான வளர்ச்சி, அனைத்துத் தரப்பிலும் வளர்ச்சி ஆகிய 3 மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். நம்முடைய இலக்கு, நோக்கம், திட்டம் அனைத்தும் வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி மட்டுமே ஆகும்.

ஆனால், நாம் வளர்ச்சிக்காக உழைக்கிறோம். காங்கிரஸ் கட்சியோ சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது. ஒரு சில சாதி அமைப்புகளுக்கு ‘லாலிபாப் மிட்டாய்’ அளித்து அவர்களைத் தேர்தல் நேரத்தில் திசை திருப்புகிறது. கர்நாடக தேர்தலில் ஒருபோதும் தொங்கு சட்டப்பேரவை அமையாது. அவ்வாறு ஒருசிலர் தவறான பிரச்சாரங்களை பரப்பி வருகிறார்கள். கர்நாடகத்தில் முழுமையான வளர்ச்சித் திட்டங்களை நாம் செயல்படுத்துவதற்கு நமக்கு முழுமையான பெரும்பான்மை கொண்ட அரசு இருக்க வேண்டும். அதற்காக நம்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் உழைக்க வேண்டும்.

கர்நாடக மக்கள் மாநிலத்தில் மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள், ஆட்சி மாற்றத்துக்கு முடிவு செய்துவிட்டார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு நல்லபிள்ளையாக நடப்பவர்கள், நண்பர்கள் சிலர் பொய்களைப் பரப்பி வருகிறார்கள். இதேபோன்ற பொய்கள் தான் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் பரப்பிவிட்டனர். ஆனால், தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராதவிதமாக அமைந்தது. கர்நாடகாவிலும் எதிர்பாராத வகையில் தேர்தல் முடிவுகள் அமையும்.” என்றுள்ளார்.

0 Responses to காங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com