Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“புத்தபிரான் புனித காலடி எடுத்துவைத்த இப்பூமியில் யுத்த மோதல்கள் மற்றும் துயர்கள் அற்ற வகையில் அனைத்தின சமூகங்களுக்கும் சமமான உரிமைகள் மற்றும் நீதி நியாயம் என்பன கிடைக்கப் பெறுகின்ற நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு நாம் அனைவரும் அணி திரளுதல் வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

வெசாக் தினத்தினை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “புத்தபெருமானின் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியத்துவமிக்க மூன்று நிகழ்வுகள் இடம்பெற்ற வெசாக் தினத்தை கொண்டாடும் பௌத்த சமய பக்தர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கக் கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

எவரும் பிறப்பிலே உயர்ந்தவராகவோ தாழ்ந்தவராகவோ காணப்படுவதில்லை என்பதனை உறுதிசெய்து மனித வர்க்கத்தினர் அனைவரையும் சமமாக மதித்துரூபவ் சமூகங்களுக்கிடையே காணப்பட்ட பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பிரிவினைகள் என்பவற்றினை அகற்றி பாரிய சமூக மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு புத்தபிரான் அவர்களால் முடிந்துள்ளது.

புத்தபிரான் புனித காலடி எடுத்துவைத்த இப்பூமியில் யுத்த மோதல்கள் மற்றும் துயர்கள் அற்ற வகையில் அனைத்தின சமூகங்களுக்கும் சமமான உரிமைகள் மற்றும் நீதி நியாயம் என்பன கிடைக்கப் பெறுகின்ற நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு நாம் அனைவரும் அணி திரளுதல் வேண்டும். சமாதானம் மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய சகவாழ்வின் ஒளியின் ஊடாக இப்புனித வெசாக் தினத்தில் எமது தேசத்தை மெருகூட்டுவோம். உங்கள் அனைவருக்கும் புனித வெசாக் தின வாழ்த்துக்கள் உரித்தாகுக!” என்றுள்ளார்.

0 Responses to அனைத்து சமூகத்தினருக்கும் நீதி நியாயம் கிடைக்க வேண்டும்; வெசாக் வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com