Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீதிமன்ற படிகளேறும் டக்ளஸ்!

பதிந்தவர்: தம்பியன் 28 June 2018

உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தொடரப்பட்ட மற்றுமொரு மானநஷ்ட வழக்கு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேற்படி வழக்கு விசாரணை யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி இராமகமலன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

உதயன் பத்திரிகையில் வெளிவந்த உண்மைக்குப் புறம்பான செய்தி தொடர்பில் குறித்த பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி டக்ளஸ் தேவானந்தா மானநஷ்ட வழக்கு தொடுத்திருந்தார்.

குறித்த வழக்கு  எடுத்துக் கொள்ளப்பட்டபோது டக்ளஸ் தேவானந்தா தரப்பில் சட்டத்தரணி அப்துல் நஜீம் ஆஜராகியிருந்ததுடன் மீள் விசாரணைகளையும் மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக டக்ளஸ் தேவானந்தாவால் தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு மானநஷ்ட வழக்கில் யாழ் மாவட்ட நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கி நட்ட ஈடாக 2 மில்லியன் ரூபாயை உதயன் பத்திரிகை பிரசுரப்பாளரான நியூ உதயன் பப்ளிகேசன் பிரைவேட் லிமிடெட் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to நீதிமன்ற படிகளேறும் டக்ளஸ்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com