Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நூறு வருடங்களின் பின்னர் வந்த புலி!

பதிந்தவர்: தம்பியன் 26 June 2018

சரியாக நூறு வருடங்களின் பின் சிறுத்தை நாட்டுக்குள் புகுந்துள்ளது.1918 ம் ஆண்டு ஜூலை மாதம் சிறுத்தையொன்று யாழ் குடாநாட்டை ஒரு கலக்கு கலக்கியதென மூத்த பத்திரிகையாளர் ந.பரமேஸ்வரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் உடுத்துறையில் இரண்டு போரையும் சிவியார் தெருவில் ஐந்து பேரையும் கடித்துக்குதறிய ஆறு அடி ஆறு அங்குலமான இந்த ஆண் சிறுத்தை பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டது. சிறுத்தையின் உடல் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு எடுத்துச்செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிளிநொச்சியில் உட்புகுந்த சிறுத்தையினை கொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் பலர் தொடர்ந்தும் கைதாகிவருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to நூறு வருடங்களின் பின்னர் வந்த புலி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com