அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியைச் சார்ந்த ஒருவரே நிறுத்தப்படுவார் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அடுத்த வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழு இன்னமும் முடிவெடுக்கவில்லை. கட்சியிலுள்ள பெரும்பாலானவர்கள் மாவை சேனாதிராஜாவையே முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோருகிறார்கள்.
கடந்த தேர்தலிலும் அவருக்கு அந்தச் சந்தர்ப்பம் இருந்தது. ஆனாலும், அதில் மாற்றத்தை ஏற்படுத்தி சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கினோம். அப்போதையை அரசியல் சூழ்நிலை காரணமாக அவரைத் தேர்வு செய்திருந்தோம்.
இரண்டு ஆண்டுகள் மாத்திரமே முதலமைச்சராக இருப்பதாக விக்னேஸ்வரன் அப்போது கூறினார். இரண்டு வருடங்களில் பின்னர் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சராக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனாலும், மாவை சேனாதிராஜா அதனை நிராகரித்திருந்தார்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவரே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவார்: சிவஞானம் சிறீதரன்