Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இம்ரான்கானுக்கு மோடி பாராட்டு!

பதிந்தவர்: தம்பியன் 31 July 2018

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற இம்ரான்கானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் இம்ரான்கான் கட்சி தெஹ்ரிக்-இ இன்சாப் கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது. இம்ரான்கான் கூட்டணி ஆட்சியமைக்க உள்ளார். விரைவில் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்கு பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இம்ரான்கான், காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தான் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பாகிஸ்தானில் ஜனநாயகம் ஆழமாக வேர் ஊன்றும் என தாம் நம்புவதாக இம்ரானிடம் மோடி தெரிவித்தார்.

0 Responses to இம்ரான்கானுக்கு மோடி பாராட்டு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com