Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27ஆந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவரது ரத்த அழுத்தம் சீராகி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.

அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரித்து செல்கிறார்கள். கருணாநிதியின் உடல்நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக ஏராளமான தொண்டர்கள் ஆஸ்பத்திரியின் முன்பு குவிந்து உள்ளனர். ஏராளமான தொண்டர்கள் விடிய விடிய அங்கேயே நின்று கொண்டிருந்ததை காண முடிந்தது.

இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரிக்க முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர். முதல் அமைச்சர் வருகையால் மருத்துவமனை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 9.57 மணியளவில் மருத்துவமனைக்குள் சென்ற முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் கருணாநிதியை நேரில் சென்று பார்த்தனர்.

பின்னர் 20 நிமிடங்கள் கழித்து முதல் அமைச்சர் உட்பட அமைச்சர்கள் வெளியில் வந்தனர். மருத்துவமனை வளாகத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல் அமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் கருணாநிதியை துணை முதல்வரும் தானும் நேரில் சென்று பார்த்ததாகவும், கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது எனவும் தெரிவித்தார். திமுக தலைவர் கருணாநிதியை, மு.க ஸ்டாலின், கனிமொழி ஆகியோருடன் சென்று பார்த்ததாகவும் முதல் அமைச்சர் தனது பேட்டியின் போது தெரிவித்தார்.

0 Responses to தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது: எடப்பாடி பழனிசாமி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com