Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்தே செயல்படுகிறோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“தமிழகத்தில் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் மாதாந்திர அடிப்படையில் முழுமையாக கிடைக்கும். நான் பிரார்த்தனை செய்தது போன்று மேட்டூர் உட்பட பல அணைகள் நிரம்பியுள்ளன; திருப்பதிக்கு கடந்த முறை நான் சென்றபோது அணைகள் அனைத்தும் நிரம்ப வேண்டும் என பிரார்த்தனை செய்தேன். சட்டப்படி காவிரியில் கர்நாடக அரசு தரவேண்டிய நீரை தந்தே ஆக வேண்டும். சுப்ரீம் கோர்ட் நீதி மன்ற உத்தரவுபடி காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்கும். திறந்துவிட்ட உபரி நீரை கணக்கில் எடுத்து கொள்ளக்கூடாது.

விவசாயிகளுக்கு தேவையான உரம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

8 வழிச்சாலை திட்டத்தால் சேலம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்களும் பயன்பெறுவர்; 8 வழிச்சாலை திட்டத்திற்காக 95% நில அளவைப் பணிகள் முடிந்துவிட்டன. 8 வழிசாலையால் எரிபொருள் மிச்சமாகும். வாகனபுகையால் மாசுபடுவது குறையும். 8 வழிச்சாலைக்கு 9 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 8 வழிச்சாலை திட்டத்தால் சேலம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்களும் பயன்பெறுவர்.

விவசாயிகளுக்கு தேவையான உரம் அரசிடம் கையிருப்பு உள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நேரில் நலம் விசாரித்தனர்; கருணாநிதி நலமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதி உள்ளேன். சொத்து வரி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படியே உயர்த்தப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் நானும் இணைந்தே செயல்படுகிறோம். காவிரியின் பாதை சமவெளியாக இருப்பதால் அணை கட்ட முடியாது; அப்படியே கட்டினால் நீர் ஊருக்குள் புகுந்து மக்கள் பாதிக்கப்படுவார்கள்; நீரை தேக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படும்.

தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து தகுந்த முடிவு செய்யப்படும். எந்த தேர்தலையும் எதிர்கொள்ள அ.தி.மு.க எப்போதும் தயாராகவே உள்ளது. டெங்கு காய்ச்சல் குறித்து எந்த அறிகுறியும் இல்லை. தேவைப்பட்டால் சுகாதார துறை மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to ஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்: எடப்பாடி பழனிசாமி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com