கருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமடித்து அநுபவித்துக்கொண்டுதான் வாழ்ந்து வந்தாரென கருணா குறித்து பத்திரிகையாளர் மாநாட்டில் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கருணா கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகளின் அடியின் பின்னர் அவருக்கு போக்கிடமிருக்கவில்லை.சுங்கிவில பக்கம் சிங்களக் கிராமத்திற்கு அருகில் மிகச்சிறிய முகாம் ஒன்று அமைத்துக்கொண்டு இருந்தார். அம்முகாமில் 75 பேர்வரையான உறுப்பினர்களோடு இருந்தார். அந்த 75 பேரிலும் 50 பது பேர் வரையானவர்கள் 12 வயதிற்கும் குறைவானவர்கள்.
அதன்பின்னர் நாங்கள்தான் கருணாவை கொழும்புக்கு அழைத்து வந்து பாதுகாப்பும் கொடுத்து வைத்திருந்தோம். புதுக்குடியிருப்புப் பக்கமாகிலும் சரி அல்லது, கிழக்கு மாகாணத்திலாவது சரி குறைந்த பட்சம் பிரபாகரன் இருந்த இடம் குறித்து கூட சரியானபடி எமக்கு தகவல் தரவில்லை.
யுத்தம் முடிந்த நாளிலிருந்து கொழும்பிலுள்ள இரவு களியாட்ட விடுதிகளில் வெவ்வேறு இனப் பெண்கள், சில அரசியல்வாதிகளின் செயலாளர்கள் போன்றவர்களுடன் ;தான் கருணாவின் வாழ்க்கை கழிந்தது. இங்கிலாந்தில் இருந்த மனைவி பிள்ளைகளைக் கூட கைவிட்டிருந்தார்.
கொழும்பிலிருந்து சல்லாப வாழ்க்கைதான் நடத்திக்கொண்டிருந்தார்.இப்படி இருந்தவர் இப்ப அரசியல் கருத்துக்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்.
2004ஆம் ஆண்டுக்கு முன் இருந்த கருணா குறித்தும் கருணா தற்போது தானே ஞாபகப்படுத்துகின்றார். ஆனால் கருணா கிழக்கிலிருந்து பாய்ந்து வந்தபின் 2004 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த கருணாபோல ஒருபோதும் நடந்துகொள்ளவில்லை.
கருணாவிற்;கு இருந்த ஒரே தொடர்பு பிள்ளையான் மட்டுமே.இப்பொழுது கருணாவும் பிள்ளையானும் வெவ்வேறு அணிகளின் எதிரிகள். கருணா என்கின்ற மனிதர் சொல்லக் கூடியளவிற்கு பெரிய ஆளாக இப்போதில்லை. அவர் சல்லாபத்தில் திளைத்த ஒரு நபர் மட்டுமே.
தற்போது இவர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவர். மேல் இருந்து கீழே வந்த ஏனைய சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்களுக்கு ஏற்பட்ட நிலைமைதான் இவரும் ஏற்பட்டுள்ளது. இவர் தற்போது தன்னுடைய பிம்பத்தை பெருக்குவதற்காகத்தான் பொட்டம்மான் உயிரோடு நோர்வேயில் இருக்கின்றார் போன்ற கருத்துக்களை கூறிவருகின்றார். இதைத் தவிர கருணாவுக்கு வேறு திறமையோ அல்லது ஏதாவது சிறியளவிலான ஓர் இயக்கத்தை உருவாக்கி நடத்துவதற்கான ஆற்றலோ ஏதுமில்லையெனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

0 Responses to கருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா!