அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வைச் சேர்ந்தவருமான வி.செந்தில் பாலாஜி, தமது ஆதரவாளர்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
சமீப நாட்களாகவே ஆ.ராசா மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் ஒன்றாக இருக்கும் படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு அவர் தி.மு.க.வில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், அது பழைய படம் என்றும், செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைவது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் ராசா ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 2016இல் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார்.
2011இல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தபோது போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் இருந்தும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்தும் 2015இல் ஜெயலலிதாவால் நீக்கம் செய்யப்பட்டார்.
2016 தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிகமாக முறைகேடு நடந்ததாக தேர்தல் ஆணையத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, தாமதமாக தேர்தல் நடத்தப்பட்ட இரு தொகுதிகளில் அரவக்குறிச்சியும் ஒன்று.
எடப்பாடி கே.பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டதால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரில் இவரும் ஒருவர்.
முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் இங்கு யார் வருந்தபோகிறார்கள் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்த தினகரன், ஒரு சிறு குழுவோ, சில நபர்களோ தங்கள் சுயநலத்துக்காக கட்சியைவிட்டு விலகிச் செல்வதால் கட்சியே முடங்கிவிடும் என நினைப்பது "பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டுவிடும்" என்று நினைப்பதைப் போன்றது என்று கூறியுள்ளார்.

0 Responses to தினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்!