Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“பாராளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்குப் புறம்பானது. எனவே அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. அதனூடாக ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது.” என்று வாதிகள் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தைக் கலைத்து கடந்த நவம்பர் மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீதான விசாரணைகள் உயர்நீதிமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், பாராளுமன்றக் கலைப்பு சட்டத்திற்கு முரணானது என நேற்றைய தினம் நளின் பெரேரா தலைமையிலான ஏழு பேர் அடங்கிய நீதியரசர் குழாம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

0 Responses to பாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com