Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவி வகிப்பதற்கும், தற்போதைய அமைச்சரவை பதவி வகிப்பதற்கும் இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.

122 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த நீதிப் பிரேரணை மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சரவை இயங்க இடைக்கால தடையுத்தரவை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கடந்த 23ஆம் திகதி தாக்கல் செய்த நீதிப் பேரணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to மஹிந்த மற்றும் புதிய அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com