மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 07.00 மணியளவில் கூடியது. இதன்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கட்டியின் இக்கூட்டத்திறிகு முன்னாள் ஆலோசகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவர்கள் வரவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தப் புதிய கூட்டணி எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியனவே இவ்வாறு புதிய கூட்டணியில் ஒன்றிணையவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி; சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!