Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

‘இந்துத்துவா கொள்கையை ஒரு போதும் விட்டுத்தர மாட்டேன்’ என்று சிவசேனா தலைவரும், மஹாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் நடந்த சிறப்பு கூட்டத்தல் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, “நான் இப்போதும் இந்துத்துவா கொள்கையிலேயே உள்ளேன். அதிலிருந்து என்னை பிரிக்க முடியாது. அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி மதசார்பின்மையை கையாழும்படி கூட்டணி கட்சியினர் வலியுறுத்தினர். சர்ச்சைக்குரிய விவகாரங்களில் நாட்டின் நலனுக்காகவும், மாநிலத்தின் நலனை கருதி மதசார்பற்ற ரீதியில் முடிவுகள் எடுக்கப்படும். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ், உடன் கலந்து ஆலோசித்த பிறகே சிவசேனா முடிவுகள் எடுக்கும்.

எனது இந்துத்துவா கொள்கைகளுக்கு உட்பட்டே கூட்டணிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். நேற்றும் இந்துத்துவா வழியிலேயே சென்றேன். இன்றும் கடைபிடிக்கிறேன். இனி வரும் காலங்களில் அப்படியே இருப்பேன். எனது இந்துத்துவா கொள்கையை ஒரு போதும் விட்டுத் தர மாட்டேன்.” என்றுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்ததன் மூலம் சிவசேனா இந்துத்துவா கொள்கைகளை விட்டுக் கொடுத்து விட்டதாக தேவேந்திர பட்னாவிஸ் குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக உத்தவ் தாக்கரே இவ்வாறு பேசி உள்ளார்.

0 Responses to இந்துத்துவா கொள்கையை விட்டுத்தர மாட்டேன்: உத்தவ் தாக்கரே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com