ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரததிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெற, அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிதம்பரத்தை ஆகஸ்ட் 21இல் சி.பி.ஐ.,அதிகாரிகள் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தனர்.
சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. ஆனால் அதே வழக்கில் பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் சிதம்பரத்தை கைதுசெய்தனர்.இந்த வழக்கில் ஜாமின் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி,ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பை நவ. 28இல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
இதில், சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அதே சமயம், இவ்வழக்கு தொடர்பாக சிதம்பரம் பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது. சாட்சிகளை கலைக்கவோ, ஆதாரங்களை அழிக்கவோ முயற்சிக்க கூடாது. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். அனுமதி இல்லாமல் பயணம் மேற்கொள்ளக்கூடாது. விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் ரூ.2 லட்சம் சொந்த பிணைத்தொகை செலுத்தவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் சிதம்பரத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியதை அடுத்து திகார் சிறையில் இருந்து 106 நாட்களுக்கு பிறகு சிதம்பரம் வெளியே வர உள்ளார்.

0 Responses to முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமின்!