Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அண்மையில் சீனாவுக்குக் கடன் வழங்கியதற்காக சர்வதேச நிதி நிறுவனமான உலக வங்கி மீது குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் இனிமேல் சீனாவுக்குக் கடன் வழங்க வேண்டாம் என்றும் உலக வங்கிக்கு வலியுறுத்தியுள்ளார்.

உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த ஒன்றரை வருடங்களாக வர்த்தகப் போர் தீவிரமடைந்து வருகின்றது.

இரு நாடுகளும் எதிர்த் தரப்பினரின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்களுக்குக் கடுமையான வரிகளை விதித்து மோதிக் கொண்டன. ஆனாலும் அவ்வப்போது தமது வர்த்தகப் போரினை முடிவுக்குக் கொண்டு வரவென பேச்சுவார்த்தைகளிலும் இந்த இரு நாடுகளும் தம்மை ஈடுபடுத்தி வந்தன. இருந்த போதும் இந்த வர்த்தகப் போரினை முடிவுக்குக் கொண்டு வரும் முன்னேற்றம் இதுவரை ஏற்படவில்லை.

இந்நிலையில் தான் சீனாவிடம் மிகப் பெரும் பணம் கொட்டிக் கிடக்கின்றது என்றும், சீனாவுக்குக் கடன் வழங்குவதை உலக வங்கி உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் தெரிவிக்கையில், சீனாவிடம் பணம் இல்லை என்றால் அவர்கள் உருவாக்கிக் கொள்ளும் வல்லமையில் தான் உள்ளனர் எனவும் கடன் வழங்குவதை உடனே நிறுத்துங்கள் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சீனாவுக்குக் கடன் வழங்க வேண்டாம் என உலக வங்கிக்கு டிரம்ப் வலுயுறுத்து!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com