Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 உயிரிழந்துள்ளனர்.

டெல்லி ராணி ஜான்சி சாலை, அனஜ் மண்டி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.22 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து, தீ அருகில் உள்ள கடைகளில் பரவியது. மின்சாரம் தொடர்பான பாதிப்பினால், தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

தீ விபத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் எல்என்ஜேபி, ஆர்எம்எல் மருத்துவமனை மற்றும் ஹிந்து ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சுமார் 50 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிபத்தில் மீட்கப்பட்டவர்கள் புகையை சுவாசித்ததால், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.

இத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்க்கு பிரதமர் மோடி தெரிவித்த இரங்கல் செய்தியில், டெல்லி அனுஜ் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்து கொடூரமானது. இதில் உயிரிழந்தோர் குடும்பத்தினரினருக்கு ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to டெல்லியில் தீ விபத்து; 43 பேர் உயிரிழப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com