Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு அமைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஷிம், மலிக் சமரவிக்ரம, அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் இக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக ஹரீன் பெர்னாண்டோ கூறுகையில், “கட்சி நிருவாக மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்ந்து அவசியமான சிபாரிசுகளை தயாரித்து அந்த சிபாரிசுகளை கட்சியின் செயற்குழுவுக்குச் சமர்பித்து அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் விரைவில் கூடவிருக்கும் விசேட மாநாட்டுக்குச் சமர்பிக்கப்படும். நேற்று முன்தினம் கூடிய ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பாக மாத்திரமே பேசி முடிவு எட்டப்பட்டது. கட்சி நிருவாக மறுசீரமைப்பு தொடர்பாக செயற்குழுக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to ஐ.தே.க மறுசீரமைப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com