ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்துடன் தொடர்புள்ளவர் என கைதாகி கடந்த 18 வருடங்களாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார் நளினி. இவர் தம்மை விடுவிக்குமாறு பல முறை மனுத்தாக்கல்கள் செய்த போதும் அவை நிராகரிக்கப்பட்டே வந்தன. இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் ஒரு மனுவை சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார். ஆரம்பத்தில் நளினிக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட போதும் பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலையீட்டால் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அதன் பின்னர் 14 வருடங்கள் சிறைவாழ்க்கை அனுபவித்த பின்னர் 2005 இல் தம்மை விடுவிக்குமாறு கோரி மனுத் தாக்கல் செய்தார். ஆனால் தமிழ் நாடு அரசு அதை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
எனவே இத்தடவை தமது மனுவில், ராஜிவ் காந்தி கொலைஅயை அவரது குடும்பத்தினரே மன்னித்துள்ள வேளை தமிழ் நாடு இதைக் கருத்தில் எடுத்து தம்மை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதன் விசாரணை திங்கட்கிழமை எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



0 Responses to நளினி தம்மை விடுவிக்குமாறு மீண்டும் மனு