''ஆணையிறவு,கிளிநொச்சி பகுதிகளில் தமிழர்களின் நிலங்களில் புத்தர் கோவில்களும், சிங்கள இராணுவ வீரர் நினைவிடங்களும் அமைத்து தமிழர்களின் நிலங்களை சிங்கள அரசு ஆக்கிரமிக்கிறது. இதுதான் தமிழர்களுக்கு உரிமை வழங்குவதா?"என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்திலன் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாத்தின் போது உரையாற்றிய இரா.சம்பந்தம் மேலும் கூறியது...'' தமிழ் மக்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்துவிட்டனர். இன்றும் இராணுவத்தினர் தமிழ் மக்களுக்கு தொல்லை கொடுத்துவருகின்றனர்.
இப்படி தொல்லை கொடுக்கத்தான் விடுதலைப்புலிகளை அழித்தீர்களா? இதுதான் தமிழர்களுக்கு உரிமை வழங்கும் விதமா? வவுனியா முகாமில் உள்ள மக்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டும். உடனே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அரசும், ஐ.நா.சபையும் முன்வரவேண்டும். மக்களை மீள் குடியேற்றம் செய்ய 180 நாள் வேலைத்திட்டம் ஒன்ற அறிவிக்கப்பட்டது.
ஆனால் இன்று 100 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் மீள் குடியேற்றம் மந்தமாகவே உள்ளது. இது வேதனை அளிக்கிறது. முகாமில் உள்ள மக்களை பருவமழை தொடங்கும் முன்பு மீள்குடியேற்றம் செய்ய வேண்டும். இல்லையேல் பெரிய சீரழிவை ஏற்படுத்தும். கண்ணிவெடிகளை காரணமாக சொல்லி அரசு தாமதப்படுத்துகிறது. கண்ணிவெடி இல்லாத இடங்களின் விபரங்களை அரசிடம் கொடுத்துள்ளோம் அங்கெல்லாம் முதலில் மீள் குடியேற்றம் செய்ய வேண்டும்.
தமிழர்கள்போலவே முஸ்லீம் மக்களையும் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும். போர் முடிந்துவிட்டதால் அரசின் துணை இராணுவத்தினரிடமிருந்து உடனடியாக ஆயுதங்கள் திரும்பப்பெறவேண்டும். வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து அவர்கள் வெளியேறவேண்டும்.
சோதனைச்சாவடிகளை அகற்ற வேண்டும். புதிய ஆட்சேர்பை மேற்கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்தால் அது தமிழர்களை அடக்குவதற்கே பயன்படும். கவுரவுத்துடன் வாழ்வதற்கான உரிமை எமது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். தமிழ்மக்களின் உரிமைகளை அரசு மறுக்க முடியாது."என்றார்.
கிளிநொச்சியில் சிங்கள ஆகிரமிப்பு: தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கண்டனம்!
பதிந்தவர்:
தம்பியன்
11 September 2009



Hello Samanthan Iya!
very good.but dont believe india. You have to tell in parliment one more. shinhala people can not destory LTTE in Srilanka or any Country. LTTE = Tamil People