சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சா ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயில் வருகையைக் கண்டித்து இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இன்று சனிக்கிழமை மதியம் 1 மணியளவில் சென்னை தியாகராயர் நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலின் முன்பு 'தமிழினப் படையணி’ என்ற அமைப்பைச் சேர்ந்த 30 பேர் அணி திரண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களால்
- ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்ய கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சவுக்கு அனுமதி அளிக்காதே!
- திருப்பதி தேவஸ்தானமே ராஜபக்சவை திருப்பி அனுப்பு!
போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளைத் தாங்கியிருந்தனர்.
- ஒழிக ஒழிக சிங்கள நாயே ஒழிக, கொலை வெறியனே ஒழிக
- கொலைக்கார ராஜபக்சவிற்கு திருக்கோயில் பரிவட்டமா?
- இனப் படுகொலை செய்தவனுக்கு பூரண கும்ப மரியாதையா?
- முடியாது முடியாது கடவுளால முடியாது
- விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம் சிங்கள நாயே விரட்டியடிப்போம்
ஆகிய கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்திலும், மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த இடத்திற்கு விரைந்து காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
மகிந்தவின் வருகையைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்! தமிழினப் படையணியைச் சேர்ந்த 30 பேர் கைது!
பதிந்தவர்:
தம்பியன்
31 October 2009



0 Responses to மகிந்தவின் வருகையைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்! தமிழினப் படையணியைச் சேர்ந்த 30 பேர் கைது!