பம்பலப்பிட்டிக் கடலில் மூழ்க வைத்துக் கொலை செய்யப்பட்ட இளைஞர் பாலவர்ணன் சிவகுமாரனின் சடலம் நேற்றுக் கரை ஒதுங்கியதையடுத்து அவரது சகோதரர் அவரை அடையாளம் காட்டினார்.
அவரது சடலம் களனி மலர்ச்சாலையில் இரண்டு மணிநேரம் வைக்கப்பட்டு, அதன் பின்னர் அவரது சொந்த ஊரான மொனராகலை, மாவலகம என்ற இடத்துக்குக் கொண்டு செல்லப்படவிருப்பதாகவும் நாளை அங்கு இறுதிக் கிரியைகள் நடைபெறும் எனவும் சிவகுமாரனின் தந்தை பாலவர்ணன் தெரிவித்தார்.
இது குறித்து பொலிஸ் தரப்பில், "மேற்படி கொலை தொடர்பாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய கன்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கின்றது.
மரணம் தொடர்பான அறிக்கை கிடைத்ததும், நீதிமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படும். நீதிமன்ற உத்தரவையடுத்து, விசாரணைகள் தொடரும்" எனக் கூறப்பட்டது.
பம்பலப்பிட்டிக் கடலில் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞரின் இறுதிக் கிரியை நாளை
பதிந்தவர்:
தம்பியன்
31 October 2009



0 Responses to பம்பலப்பிட்டிக் கடலில் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞரின் இறுதிக் கிரியை நாளை