Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் இளைஞர், யுவதிகளை திசை திருப்பும் நோக்கில் சிறீலங்கா அரசினால் வடபகுதியில் இளைஞர் படையணிக் கட்டுமானம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களின் எண்ணத்தினை திசை திருப்பும் நோக்கில் பாடசாலைகளில் இருந்து இடைவிலகிய மாணவர்களை கொண்டமைந்த இரண்டு இளைஞர் படையணியினை நிறுவவுள்ளதாக இளைஞர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

700 இலட்சம் ரூபா செலவில் யாழ்ப்பாணம், காரைநகரிலும், மன்னாரிலும் இவ்விளைஞர் படையணிகள் நிறுவப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ள சிறீலங்கா அரசு வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தைக்கு தேவையான இளைஞர், யுவதிகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளது. வடக்கில் முதல்கட்டமாக 500 இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to பாடசாலைகளில் இருந்து இடைவிலகிய தமிழ் இளைஞர், யுவதிகளைக் கொண்ட படையணிக் கட்டுமானம்: சிறீலங்கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com