மட்டக்களப்பு மாவட்டம், ஊறுகாமம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை கைக்குண்டு ஒன்று வெடித்ததில் சிறுவர்கள் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்திய பிரதேசத்தில், சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையிலேயே இந்த கைக்குண்டு தவறுதலாக வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த சிறுவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.



0 Responses to மட்டக்களப்பில் வெடிவிபத்து: இரண்டு சிறுவர்கள் காயம்