Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை தொடர்பாக ஆராய்வதற்காக நியமித்திருக்கும் மூவரடங்கிய ஆலோசனைக்குழுவைக் கலைக்குமாறு வலியுறுத்தி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு அமைச்சருமான விமல் வீரவன்ச நேற்று காலை ஆரம்பித்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது.

.நா. செயலாளர் நாயகத்திடமிருந்து சாதகமான அறிவிப்பு வெளிவராத வரை தமது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படமாட்டாது என விமல் வீரவன்ச அங்கு தெரிவித்தார்.

நேற்றுக் காலை கொழும்பிலுள்ள .நா. அலுவலகத்துக்கு முன்னால் பெருந்திரளான மக்கள் முன்னிலையில் மகா சங்கத்தினர்களின் பிரித் ஓதலுடன் விமல் வீரவன்ச தனது சாகும்வரையான உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை தேசிய சுதந்திர முன்னணியினர் கொழும்பிலுள்ள .நா. அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியதன் பின்னர் சத்தியாக் கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதில் தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஹமட் முஸம்மில் மற்றும் நிமல் பிரேமரத்ன,சேனாரத்னசில்வா ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மூவரும் நேற்றுக் காலை தமது உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்.

இதனையடுத்தே விமல் வீரவன்ச தமது சாகும்வரையிலான உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.தனது உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக விமல் வீரவன்ச அங்கு கருத்துத் தெரிவிக்கையில்;

ஆலோசனைக்குழுவை உடனடியாகக் கலைக்க வேண்டுமென .நா. செயலாளர் நாயகத்தை வலியுறுத்துமாறு இலங்கையின் நேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்தார்.

முக்கியமாக சீனாவும் ரஷ்யாவும் கூடுதல் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆலோசனைக்குழுவை உடன் விலக்கிக்கொள்ளாதவரை இலங்கை மீது இது தொடர்பில் எதுவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமலிருப்பது தொடர்பாக உறுதியளிக்காதவரை தனது உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என விமல் வீரவன்ச உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

இந்த சர்வதேச சதிகளைத் தோற்கடிக்க தேசப்பற்றுள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

விமல் வீரவன்சவின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தேசிய சுதந்திர முன்னணி,தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஆகியவற்றைச் சேர்ந்த பலரும் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

0 Responses to பிரித் ஓதலுடன் உண்ணாவிரதப் போரில் குதித்த வீரவன்சவின் போராட்டம் தொடர்கிறது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com