சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொள்ள கோட்டாபய ராஜபக்ச, உத்தரவிட்டதாக கூறிய சரத் பொன்சேகாவின் வழக்கு விசாரணை இன்று ஐந்தாவது நாளாகவும் கொழும்பு மேல் நீதிமன்றததில் இடம்பெற்ற போது திடீரென மின்சாரம் விநியோகம் தடைப்பட்டதன் காரணமாக வழக்கை ஒத்தி வைக்க நேரிட்டது.வழக்கின் பிரதிவாதியான சரத் பொன்சேகாவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, நளின் லதுவஹெட்டி சண்டே லீடர் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸிடம் இன்றும் குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.
இந்த தருணத்திலேயே மின்சார தடை ஏற்பட்டது. இதனையடுத்து மூன்றுபேரைக்கொண்ட நீதிபதிகள் குழு விசாரணையை எதிர்வரும் 2 ம் திகதி வரை ஒத்திவைத்தது.
இதேவேளை நேற்று இடம்பெற்ற குறுக்கு விசாரணையின் போது, வெள்ளைக்கொடி செய்திக்காக தமக்கு இலங்கையின் பத்திரிகை ஆசிரியர் சங்க, விருது கிடைக்காமை தொடர்பில் 2010 ஆகஸ்ட் முதலாம் திகதியன்று தாம் விமர்சித்து எழுதிய கடிதம் தொடர்பான தகவல்கள் தமக்கு ஞாபகமில்லை என பிரட்ரிக்கா ஜேன்ஸ் நேற்று தெரிவித்திருந்ததன் அடிப்படையில் இன்று விசாரணை தொடர்ந்தது.
இன்று குறுக்கு விசாரணையை மேற்கொண்ட சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி, நளின் லதுவாஹெட்டி, இரண்டு மாதங்களுக்கு முன்னர் எழுதிய கடிதம் நினைவில்லை என்றால், 2009 டிசம்பர் 13 ஆம் திகதியன்று வெளியான வெள்ளைக்கொடி சம்பந்தமான தகவல்கள் உங்களுக்கு எவ்வாறு நினைவிருக்கும் என குறுக்கு கேள்வி எழுப்பினார்.
இதற்து பதிலளிக்கையில், சரத் பொன்சேகாவிடம் தாம் பெற்ற பேட்டியை தமது பதிவு புத்தகத்தில் வைத்துள்ளமையால், நினைவுடன் சாட்சியம் வழங்க கூடியதாக இருப்பதாக பிரட்ரிக்கா ஜேன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதன் போதே மின்சார தடை ஏற்பட்டது. அதனால் வழக்கு வரும் நவம்பர் மாதம் 2ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to மின்சார தடையால் வெள்ளைக்கொடி விவகாரம் ஒத்திவைப்பு