ஜனநாயகத்தின் நான்காவது தூண் “ஊடகம்” என்று கூறப்படுகின்றது. ஊடகங் கள் தமது பணியை நேர்மைத் திறத்துடன்‘ ஆற்றினால் ஜனநாயகம் பழுதறாது இயங்கும் என்பது முடிபு. இருந்தும் சமகாலத்தில் “ஊடகப் பயங் கரவாதம்” பற்றிய சொல்லாடலும் வாதப் பிரதி வாதங்களும் எழுகை பெற்றுள்ளமை மிகப் பெரும் துரதிர்ஷ்டமாகும்.ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய ஊடகங்கள் எழுந்தமானமாக – தமக்கு எதிரா னவர்களை வஞ்சிக்கும் நோக்குடன் – அரசியல் கலப்புடன் செயற்படும் போது ஜனநாயகப் பண்புகள் நஞ்சேறி விடுகின்றன. இந்த நஞ்சடைத லால் மக்களும் பாதிப்படைகின்றனர். இந்த அபத்தமே இலங்கைத் தீவில் நடந்து கொண்டிருக்கின்றது. தமக்குச் சார்பானவர்களுக்கு விருது வழங்குதல் முதல் ஐந்து நட்சத்திர விடுதிகளில் நடக்கும் இராப்போசன விருந்தோடு நியாயத்தை புதைத்துவிட்டு அநியாயத்தை நியாயமாகக் காட்டி அதனை அரங்கேற்றவைக்கும் அநீதி வரை ஊடகப் பயங்கரவாதத்தின் சில செயற்பாடுகள் ஆகும்.
என் செய்வது. போரினாலும், பொருளாதார பலவீனத்தாலும் பாதிக்கப்படும் நாடுகள் முத லில் நீதியையும் நியாயத் தன்மையையும் இழக்கின்றன. இதற்கு அரச நிர்வாகம் முதல் ஊடகம் வரை ஏதோவொரு வகையில் பங்காற் றும் என்ற பட்டறிவின் நிஜத்தை நினைத்து கழிவிரக்கப்படுவதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியாத நிலை.
எதுவாயினும் தமிழ் மக்களின் நலன் தொடர்பில் ஊடகங்களின் பங்களிப்பு அவ சியம் என்பதை நிறுத்திட்டமாக உணர முடிகின் றது. இது விடயத்தில் யாழ்.பிராந்தியத்திலி ருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள் அரசி யல் விருப்பு வெறுப்புகளைக் கடந்து, தமிழினத் தின் பொது நலன் கருதி ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய கால கட்டத்தில் உள்ளன.
இந்த ஒற்றுமையானது முழுமையாக இருக்க வேண்டுமென்று கூட இல்லை. மாறாக தமிழ் மக்களின் நலனுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை வெளிப்படுத்துவதில் மட்டுமேனும் பகுதியாக ஒற்றுமைப்படலாம்.இதற்காக யாழ்.பிராந்தியப் பத்திரிகைகளின் முகாமைத்துவப் பிரதிநிதிகள் ஓர் இணக்கப் பாட்டிற்கு வருவதன் மூலம், குறித்த விடயங் களை ஒரே வடிவத்தில் ஒருமைப்பாட்டுடன் வெளிப்படுத்த முடியும்.
இது எம் இனத்திற்கு நாம் செய்யும் மிகப் பெரும் புனிதப் பணியாக இருக்கும் என நம்புகின்றோம்.இத்தகையதோர் இணைப்பு இல்லை யாயின் தவறு இழைப்போரை ஒரு பத்திரிகை சுட்டிக்காட்ட இன்னொரு பத்திரிகை அவரை காப்பாற்றி கரைசேர்த்துவிடும் நிகழ்வே நடக் கும். இதன் மூலம் தமிழினத்திற்கு எதிரான திட்டங்கள் கனகச்சிதமாக அரங்கேறி விடும்.
ஆகையால் அன்பிற்குரிய தமிழ் ஊடகவிய லாளர்களே! எங்களின் கெளரவம் காப்பாற்றப் படவும், யார் வேண்டுமானாலும் ஊடகவிய லாளர் மீது எந்தக் குற்றச்சாட்டையும் கூறலாம் என்ற நிலைப்பாட்டை அறுத்தெறியவும் தமிழினத்தின் எதிர்காலத்தை காப்பாற்றவும் ஒன்றுபடுதல் அவசியமாகும்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to தமிழ் மக்களின் நலன் காக்க தமிழ் ஊடக ஒற்றுமை அவசியம்