லண்டன் தொடக்கம் ஐநா வரை ஐநா முதல் ஐரோப்பிய ஒண்றியம் வரை ஒலித்த தமிழ் பேசும் மக்களின் நீதிக்கான போராட்டம் இடைவிடாது ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்பிருந்து இலங்கை போர்க்குற்றவாளியான ஐகத் டயஸ் துணைத்தூதுவராக பதவி வகிக்கும் இலங்கை தூதரகம் அமைந்துள்ள பேர்லின் நகரை நோக்கி தொடர்கிறது.நேற்று முன்நாள் 11.10.2010 மதியம் 12.05 மணியளவில் பெல்ஜியம் புருஸ்சல்ஸில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் முன்பாக ஆரம்பமான இவ் மிதிவண்டிப்பயணம் அன்றிரவு 8.30 மணிக்கு 78 km தூரத்தை கடந்த நிலையில் நிறைவடைந்தது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று 12.10.2010 காலை 08.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட மிதிவண்டிப்பயணம் பிற்பகல் 03.00 மணியளவில் 60 km தூரத்தை கடந்து Aachen எனும் பிரதேசத்தை சென்றடைந்தது.
அத்துடன் Aachen நகரில் அமைந்துள்ள Misereor எனும் மனிதநேய செயற்பாட்டு நிறுவனமொன்றை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவ் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவும் கையளிக்கப்பட்டது.
பின்பு Aachendon எனும் மக்கள் அதிகம் கூடும்; நகரின் மத்தியில் அமைந்துள்ள தேவாலய சுற்றுப்புறங்களின் தலாகத்தில் தற்போதைய நிலையை விளக்கி துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.
இன்றைய மிதிவண்டிப் பயணத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் Aachen மானில தமிழ்மக்கள் உட்பட வேறு நகரங்களிலிருந்தும் பல மக்கள் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிக்காட்டினர்.
அதன்பின் பயணத்தை மேற்கொள்வோர் தமிழ் மக்களுடன் கூடிக்கதைத்து புலம்பெயர் தமிழ் மக்களின் மீள் எழுச்சியின் அவசியத்தை விளக்கியதுடன் தொடர்ந்து Bonn எனும் மானிலத்தை நோக்கி பயணித்தனர்.
பயணத்தின் இறுதிநாளான 22.10.2010 வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு Berlin, Brandenburgertor எனும் வரலாற்றுப் புகழ்பெற்ற திடலில் எழுச்சிக் கவனயீர்ப்பு நிகழ்வும் ஏற்பாடகியுள்ளது.
ஆகவே அனைத்து தமிழ் மக்களையும் எழுச்சியுடன் கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்
Walk for Justice (மனிதநேய நடைபயணக் குழுமம்)
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
சுவிஸ் ஈழத்தமிழரவை


மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to பேர்லின் நோக்கி மனிதநேய மிதிவண்டி பயணம் (படங்கள் இணைப்பு)