
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் இராணுவத்தினரும் பொதுமக்களும் சேர்ந்து நடத்தும் கூத்தைப் பார்த்தீர்களா ? மெய்வல்லுனர் போட்டி நடக்கும் வேளையில் அங்கே நின்ற இராணுவத்தினர் மதுபோதையில் நின்றுறிருந்ததாக அங்கிருந்த சில பொதுமக்கள் தெரிவித்தனர். இதில் இராணுவத்தினர் மற்றும் சில பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே கயிறிழுக்கும் போட்டி கூட நடந்துள்ளதாம்.
மேய்ப்பதற்கு தலைவன் இல்லை என்றால் ஆடுகள் என்ன செய்யும், ஆனால் அதனையும் ஈ.பி.டி.பி யினர் விட்டுவைக்கவில்லை. ஓநாய்க் கூட்டங்கள் அங்கே ஆட்டம் போடுகின்றது. வன்னியில் 40,000 பொதுமக்களைக் கொண்ற இராணுவத்தோடு கயிறு இழுக்கும் அளவுக்கு தமிழன் மானம் என்ன தரம்தாழ்ந்து விட்டதா ? இல்லை நடந்த அனைத்தையும் அவ்வளவு சீக்கிரமாக மறந்து போனார்களா ?



அதிர்வு
பயமுறுத்தகல்களுக்கும அச்சுறுத்தல்களுக்கும மத்தியில் அவர்கள் என்ன செய்வார்கள்? காட்டிக் கொடுக்கவும் கூட்டிக் கொடுக்கவம் ஒரு கூட்டம் ஆயுதங்களுடன் அரச பயங்கரவாதிகளுடன் உலவும் போது ஆடுகளினால் என்ன செய்ய முடியும? மறுபடியும் தலைவன் வரவிற்காய் காத்து நிற்கின்றோம். இந்த அவல நிலை நீங்க.