Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இரண்டாவது ஆண்டை நினைவு கூரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதுகூட ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பான யுத்தக்குற்றக் குழுபல பத்தாயிரம் மக்கள்இறுதிப் போரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தத சில வாரங்களிற்குள்ளே வருகிறது இந்த இரண்டாவது ஆண்டு நிறைவு தினம்.

ஐக்கிய நாடுகள் சபையின் குழு சிறீலங்கா அரசின் கொடிய வெஞ்சினத் தாக்குதலை, காட்டுமிராண்டித்தனமான மிருகவெறிச் செயலை அப்பட்டமாக, துல்லியமாக உலகிற்குக் காட்டியுள்ள இந்தப் பொழுதில் மே 18ம் திகதியை ஈழத்தமிழனிற்காக, உலகத் தமிழினத்திற்காக, விடுதலைக்காகப் போராடும் மனித குலத்தினரிற்காக இறுதிவரை போராளிகளோடு நின்று மடிந்த அந்த மக்களிற்கான நாளாக நாடு கடந்த அரசு அறிவித்துள்ளது.

பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்ற கொக்கரிப்புக்களையெல்லாம் இல்லாது செய்து இல்லையில்லை இறுதிப் போரில் பல பத்தாயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று .நா.வின் குழு சொன்னதின் பின்னர் இனி வரும் நாட்கள் ஒவ்வொன்றிலும் நாங்கள் சிறீலங்காவை யுத்தக்குற்றவாளியாக்கும் செயற்பாட்டிலேயே ஈடுபடுவோம் என்பதை உறுதியெடுத்துச் செல்லும் அதேவேளை, மரணித்த அந்த மக்களை, அந்தத் தேசத்தை நினைவுகூரும் நாளொன்றை நாங்கள் கடைப்பிடித்தேயாக வேண்டும்.

இதனையே தான் ஐக்கிய நாடுகள் அவையின் இலங்கைக்கான முன்னை நாள் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ் கூட இது சேர்பியப் படைகளின் படுகொலைகளையொத்த ஒரு இனச் சுத்திகரிப்பு எனவும், ஈழப்போரின் கடைசி நாட்களில் 40,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்.

மரணம் கொடியது எமது மக்கள் சந்தித்த மரணம் அதனிலும் கொடியது. வயது வேறுபாடின்றி, பால் வேறுபாடின்றி கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட அந்த மக்களின் ஆத்மசாந்திக்காக நாங்கள் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும், அவர்களிற்காக வேண்டுதல்களை மேற்கொள்வதும் மானிட தர்மம். அதனை நாங்கள் மதித்து அவர்களிற்கேயுரிய நாளாக மே 18 அனுசரிப்போம்.

யுத்தக் குற்றநாள் என நாங்கள் வெறுமனே ஒரு நாளை பிரகடணப்படுத்தி விட்டு மற்றைய நாட்களெல்லாம் வீணாயிருக்க முடியாதபடியான ஒரு கொடுமை எங்களின் இனத்தின் மீது நடத்தப்பட்டிருக்கிறது. எனவேயுத்தக்குற்ற நாள்என்ற குறுகிய ஒரு வட்டத்திற்குள் சிறீலங்காவின் கொடுஞ்செயல்களை அடக்கிவிட முடியாது.

அத்தோடு இந்தப் பல பத்தாயிரம் பொதுமக்களையும் நினைவுகூருவது மாத்திரமல்ல மே 18. கொண்ட கொள்கைக்காகவும், தங்களிடமிருந்து எப்போதுமே பிரிக்கமுடியாத மக்களிற்காகவும் தீரத்துடன் போராடிஇறுதிப் போரில்களச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களையும், தளபதிகளையும் நினைவு கொள்ளும் ஒரு தினமாகவும் இருக்கிறது மே18.

இறுதிப்போரின் நிலை தெரிந்து நாங்கள் இனிவரும் பொழுதுகளில் உங்களுடன் தொடர்பு கொள்வோமோ தெரியாது. இதுவே இறுதித் தொடர்பாகவும் இருக்கலாம் என உறுதி சற்றும் தளம்பாத குரலில் தீரமான வார்த்தைகளோடு எம்மோடு பேசிக் களமாடி காவியமான தளபதிகள் போராளிகள் வீரச்சாவடைந்த தினமும் மே 18ம் திகதியே!

எனவே மே 18ம் திகதி எமது மக்களிற்கான, இறுதிப் போரில் களமாடி மடிந்த வீர மறவர்களிற்கான, தலைமையின் சொல்லையேற்று சரணடைந்த போது படுகொலை செய்யப்பட்ட தளபதிகள், போராளிகளிற்கான நாளாக இருக்கட்டும்.

வருடச் சுழற்சியின் ஏனைய 364 நாட்களும் சிங்களத்தின் கொடுங்கோண்மையை, தமிழின இனச் சுத்திகரிப்பை, யுத்தக் குற்றங்களை வெளிக்கொணரும் நாட்களாக ஒவ்வொரு தமிழனிற்கும் இருக்கட்டும்.

0 Responses to மே 18 துக்கநாளாக இருக்கட்டும்! இதர 364 நாட்களும் யுத்தக் குற்றநாட்களாக இருக்கட்டும்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com