Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முதலாம் திகதி மே மாதம் டென்மார்க் நாட்டில் இருந்து ஆரம்பம் ஆகிய மிதிவண்டிப்பயணம் இன்று பத்து நாட்களை கடந்து யேர்மனியில் Osnabrück எனும் நகரத்தை வந்தடைந்தது . திரு பார்த்தீபன் தம்பிராசா, திரு மனோகரன் மனோரஞ்சிதன் ஆகியோர் தமது நீதி தேடி செல்லும் பாதையில் 09.05.2011 அன்று Bremen நகரத்தில் சர்வதேச மனிதஉரிமை அமைப்பினருடன் சந்திப்பை மேற்கொண்டனர் .

இவர்களின் பயணம் இறுதியாக 18.05.2011 போர்குற்றவியல் நாள் அன்று அனைத்துலக போர்க்குற்றவியல் நீதிமன்றத்தின் முன்றலில் வந்தடையும் .

கடந்த ஆண்டு டென்மார்க் தமிழர் பேரவையால் போர்க்குற்றத்தில் நேரடியாக ஈடுபட்ட அத்தோடு பங்கெடுத்த அதன் பின்னர் வெளிநாடுகளுக்கு தூதுவர்களாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தளபதிகளுக்கு எதிரான வழக்கு பதிவு சம்மந்தமாக அவர்களின் சட்டத்தரணி ஊடாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட கோரிக்கைகளுக்கு, பல தடவை கடிதங்கள் ஊடாக கேட்ட பின்னரும், இன்றுவரை எவ்வித மறுமொழியும் கிடைக்காத படியால், இம் முறை அதை வலியுறுத்தும் முகமாக திரு பார்த்தீபன் தம்பிராசா, திரு மனோகரன் மனோரஞ்சிதன் ஆகியோர் நீதி கேட்டு டென்மார்க்கில் இருந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நோக்கி மிதிவண்டிப்பயணத்தை ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சொல்லில் அடங்கா துயரத்தில் துடிக்கும் எம் உறவுகளின் உரிமைக்கு இவர்களின் உறுதி தளராத நீதி கேக்கும் பயணத்தை அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களும் ஆதரிப்பதோடு அவர்களுக்கு வாழ்த்தும் உற்சாகமும் வழக்கும் முகமாக அவர்களை தொடர்புகொள்வதற்கு பின்வரும் தகவல்களை இங்கே குறிப்பிடுகிறோம்.

டென்மார்க் மக்கள் பேரவையின் பேச்சாளர் றேமனுடன் நேர்காணல்

நேரடித் தொடர்பு: (0049 ) 01746356387

வலைத்திரையில் டென்மார்க்கில் இருந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நோக்கிய மிதிவண்டிப்பயணம்
மின்னஞ்சலில் மற்றும் முகப்புத்தகத்தில் உங்கள் வாழ்த்து செய்திகளை அனுப்புவதற்கு : forum@dansktamilskforum.dk

Facebook: 1000 km for retfærdighed - War Crimes Day


நன்றி
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

0 Responses to பத்து நாட்களை கடந்து, நீதி தேடி விரைந்து செல்லும் மிதிவண்டிப்பயணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com