Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நியூசிலாந்து நாட்டின் தமிழ் இளையோர் அமைபினரால் ஓக்லாந்து நகரில் 27திகதி ஞாயிற்றுக்கிழமை 6pm at Mt Roskill Intermediate Schooll மண்டபத்தில் அகவணக்கத்துடன் சிறப்பாக மாவீரர் நாள் நிகழ்ச்சி ஆரம்பமாகியது.

முதலில் நியூசிலாந்து நாட்டின் கொடியினை Dr வசந்தன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியினை மாவீரர் ஜெயராசின் தந்தையார் ஏற்றிவைத்தார்.

பொதுச் சுடரினை திரு .அட்புதசிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஈகைசுடரினை மாவீரர் விஜையின் தந்தையார் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து அனைவரும் தீபங்களை கையில் ஏந்தியவாறு மலர் வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து நியூசிலாந்து நாட்டின் தமிழ் இளையோர் அமைபினரால் உருவாக்கப்பட்ட தற்போதைய சூழ்நிலைகளை எடுத்துகாட்டும் வீடியோ ஒளிப்படம் காண்பிக்கப் பட்டது.

அடுத்து மாவீரர்நாள் 2011ம் ஆண்டிற்கான சிறப்பு உரையினை அவுஸ்திரேலியாவில் இருந்து வருகைதந்த திரு .பாலசிங்கம் பிரபாகரன் அவர்கள் உரை நிகழ்த்தினார் அவர் தனது உரையில் இன்றைய போராட்டமானது இளையோர்களின் கைகளில்தான் தங்கி உள்ளது என்றும் இதற்கு புலம்பெயர்வாழ்கின்ற அனைத்து மக்களினதும் செயற்பாடுகள் அவசியம் எனவும் கூறி தனது உரையினை முடித்தார் .

இதனைத் தொடர்ந்துமாவீரர்களை விபரிக்கும் உணர்வுமிக்க உரைகளும் கவிதைகளும்நடனங்களும் நாடகங்களும் பாடல்களும் இடம்பெற்றன. இன்நிகழ்வில் பலநுற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.இறுதியாக கொடியிஇறக்கத்துடன் முடிவுபெற்றன.





0 Responses to நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com