டென்மார்க்கில் மாவீரர் நாள் கேர்ணிங், கொள்பேக் நகரங்களிலுள்ள பிரமாண்டமான மண்டபங்களில் கார்த்திகை 27ம் நாளன்று கொண்டாடப்பட்டது.
எங்கள் தேசத்தின் விடுதலைக்காக தங்கள் இன் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வு விளக்கேற்றம், கொடியேற்றம் மற்றும் அகவணக்கத்துடன் ஆரம்பித்தது.
மாவீரர்களின் குடும்பத்தினர் கல்லறைகளுக்கு விளக்கேற்றும் பொழுது
துயிலுமில்லப்பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
இன்னிகழ்வு எல்லோருடைய கண்களையும் கலங்க வைத்து விட்டது. பின்பு பொதுமக்கள் மாவீரர்களுக்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மாவீரர் கானங்கள், நடனங்கள், நாடகங்கள் என நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன. சிறப்புரையை பத்திரிகை ஆசிரியர் திரு.கனகரவி அவர்கள் ஆற்றியிருந்தார்.
காலம் எம்மை கடந்தும் செல்லலாம், கண்ணீர் சிந்தி கரைந்தும் நிற்கலாம். ஆனால் ஒரு நாள் வெல்வது உறுதி அதனை நெஞ்சினில் எழுதி, எங்கள் மண்ணை நிட்சயம் மீட்போம் என்ற நம்பிக்கையுடன் மக்கள் வீடு திரும்பினர்.



0 Responses to டென்மார்க்கில் இடம்பெற்ற மாவீர் நாள் 2011 (படங்கள் இணைப்பு)