தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலைகளையும், 1948′ ஆண்டு தொடக்கம் 1983′ ஆடி 2009 வைகாசி மாதத்தில் நடந்த இன அழிப்பையும் சர்வதேசத்திற்கு உரத்துக்கூறுவதற்காக சிவந்தன் கோபி அவர்கள் லண்டனில் தொடர் உண்னாநிலை போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
இன்றும் சுயநலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ இளைஞர்கள் மத்தியில், தன்னை வருத்தி தமிழின உரிமைகளுக்காய் தாகமிருக்கும் மனிதநேய பணியாளன் திரு கோபி சிவந்தன் அவருக்கு புலத்தில் குறிப்பாக பிரித்தானியாவில் வாழும் அனைத்து உறவுகளும் பெரும் ஆதரவினை திரட்டி அவரின் இலட்சியத்தில் அவர் முழுமையாக வெற்றி பெற வைப்பது அனைத்து தமிழ் மக்களின் இன்றைய முக்கிய கடமையாகும் என தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ நெடுமாறன் ஐயா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்னும் பல தென்னிந்திய ஆதரவாளர்கள் தமது ஆதரவினை சிவந்தன் கோபிக்கு தெரிவித்துள்ளனர்.
ஐந்தாவது நாளாக தொடரும் சிவந்தனின் தொடர் உண்ணா நிலை போராட்டம்: ஆதரவு திரட்டுமாறு தென்னிந்திய ஆதரவாளர்கள் வேண்டுகோள்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
26 July 2012



em thai tamilarkalukko nanri