Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளிக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

கட்சி மூத்த தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்துள்ளதாகவும், இதில் முடிவெடுக்கும் சுதந்திரம் தனக்கு வழங்கப்பட்டது என்றும், பிரணாப்பிற்கு ஆதரவு வழங்குவதாகவும், துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, தாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலேயே நீ‌டித்து வருவதாகவும், இருந்தபோதிலும், இடதுசாரி கட்சிகளை விட காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் என்னைப் பற்றி அவதூறு பிரசாரம் செய்து வருவதாகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கடந்த 8 மாதங்களாக பிரணாப் முகர்ஜியுடன் தாம் பேசவில்லை என்றும், அப்துல் கலாமை வேட்பாளராக நிறுத்த முன்வந்தபோதும், மற்ற கட்சிகள் அதனை ஆதரிக்கவில்லை.

எங்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை. குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணித்தால் வாக்குகள் வீணாகும். மேலும், பிரணாபை ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார் என்பதால் இந்த அரசியல் முடிவை எடுத்துள்ளதாக மம்தா தெரிவித்துள்ளார்.

இதனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. வரும் 19ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மம்தா பானர்ஜி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுமாறு கூறினார். ஆனால் அதற்கு கலாம் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து மம்தா தற்போது பிரணாபுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளார். மம்தா முன்னதாக அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரசுடன் மனக்கசப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு: மம்தா பானர்ஜி அறிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com